இத்தனை பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்களா? ட்விட்டரில் வெளிப்படுத்தி வரும் சின்மயி.! 

இத்தனை பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்களா? ட்விட்டரில் வெளிப்படுத்தி வரும் சின்மயி.! 

சென்னை கே.கே நகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் பணியாற்றிய ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், ஆன்லைன் வகுப்பில் அறைநிர்வாணத்தில் வகுப்பு நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இது பெரும் சர்ச்சையான நிலையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பலரும் தங்களுக்கும் ஆசிரியர்களால் நேர்ந்த பாலியல் சீண்டல்களை கூறிவருகின்றனர். இந்நிலையில் பத்ம சேஷாத்ரி, மகிரிஷி வித்யா மந்திர், செட்டிநாடு வித்யாஸ்ரம், ஜவஹர் வித்யாலயா போன்ற பள்ளிகளின் மாணவிகள் சமூகவலைத்தளங்களில் கூறியுள்ள பாலியல் சீண்டல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அந்த பாலியல் ஆசிரியர்களை அம்பலப்படுத்தி வருகிறார் பிரபல பாடகி சின்மயி.

 இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல மாணவிகள் பகிர்ந்துள்ள சம்பவங்களை தொகுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இவரின் இந்த பதிவை பலர் ரீட்வீட் செய்து வருகிறார்கள். இவரின் இந்த முயற்சி மூலம் பல ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.