தங்களது குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது - பெற்றோர்களுக்கு அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி  உள்ளார்.

தங்களது குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது - பெற்றோர்களுக்கு அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை தமிழர்களுடைய வாழ்வை மேம்படுத்தும் வகையில் 314 கோடி நிதி ஒதுக்கப்பட்டுளு்ளதாக தெரிவித்தார்.

ஈழ தமிழர்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்  மாணவர்கள் எந்தவித பதற்றமும் இன்றி தேர்வை கையாள வேண்டும் என்றார். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட திறமை இருப்பதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது எனறும் அறிவுறுத்தினார்.

மேலும் விடுமுறை நாட்களில் கம்ப்யூட்டர், நீச்சல் போன்ற குறுகிய கால பயிற்சிகளை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என கூறிய அன்பில் மகேஷ், நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தெரிவித்தார்.