கீழடியில் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக நாளை மு.க.ஸ்டாலின் கீழடியில் ஆய்வு மேற்கொள்கிறார்.
கீழடியில் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு
Published on
Updated on
1 min read

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக நாளை மு.க.ஸ்டாலின் கீழடியில் ஆய்வு மேற்கொள்கிறார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில், அதன் 7ம் கட்ட அகழாய்வு சமீபத்தில் நிறைவடைந்தது.

இதனிடையே அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு 12 புள்ளி 21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.  

அப்பணிகளை பார்வையிட  முதலமைச்சர்  ஸ்டாலின் நாளை பிற்பகல்  அங்கு செல்கிறார். அதை தொடர்ந்து வருகிற 30ம் தேதி பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்கிறார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com