“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் - “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்..!

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் - “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்..!

’நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் ’கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் மூலம், மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள், தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில், அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய, பிரிவு வாரியாக என்னென்ன பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்புகள் உள்ளன?, கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? மற்றும் மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என்னென்ன? என்பன போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியானது, வரும் 29ஆம் தேதி முதல் ஜூலை 2ஆம் தேதி வரை 4 நாட்கள், அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.