வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். 

மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இதையும் படிக்க : தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு...!

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் பகுதியில் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.