பருவ மழையை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் அறிவுரை  

மழைக்காலங்களில் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வழிவகை செய்யுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பருவ மழையை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் அறிவுரை   

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.  இதில், மழை காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், தேவைப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் அமைத்து பொதுமக்கள் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மழைக்காலங்களில் தொற்று வியாதிகள், டெங்கு போன்றவை பரவாமல் இருக்கவும், அடிப்படை பொருட்களான பால், உணவு, மருந்துகள் தடையின்றி கிடப்பதை உறுதி செய்திடவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறைக்கு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதிக்கப்படாத வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விரைந்து கொள்முதல் செய்யவும், அறிவரை வழங்கப்பட்டுள்ளது.