உகாதிக்கு வாழ்த்து சொன்ன முதலமைச்சர்...!

உகாதிக்கு வாழ்த்து சொன்ன முதலமைச்சர்...!

தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகையை ஒட்டி தெலுங்கு, கன்னட மொழி  பேசும் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உகாதி திருநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெலுங்கு மற்றும் கன்னட உடன்பிறப்புகளுக்கு உகாதி வாழ்த்துகள் என்றும், அறுசுவை உணவோடு மகிழ்ச்சி பொங்க புத்தாண்டை வரவேற்கும் தங்களது இல்லத்திலும் வாழ்விலும் மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திட நெஞ்சார வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

திராவிட இன மக்களுக்குள்ளான ஒற்றுமை மிளிர்ந்து, சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடவும், நமது மொழி, பண்பாடு மற்றும் உரிமைகளைக் காத்து உலகளவில் சிறந்து விளங்கிட வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : பச்சை நிறத் துண்டுடன் வேளாண் பட்ஜெட்டை தொடங்கினார் அமைச்சர் பன்னீர்செல்வம்...!!!

பிரம்மன் உலகத்தைப் படைத்த நாளாகக் கருதப்படும் உகாதி திருநாளை கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு உகாதி வாழ்த்துகள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட வாழ்த்துவதாக தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

உலகத்தை உருவாக்கிய உகாதி நாள், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, சகோதரத்துவம், இன்பம், வளமை, நிம்மதி உள்ளிட்ட அனைத்தும் நிறைய வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உகாதி வாழ்த்து கூறியுள்ளார்.