பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

பருத்திநூல் விலையை கட்டப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதி உள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

பருத்தி  நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த க் கோரி மத்திய அமைச்சர் பியூஸ் கோயலு க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், தமிழ கத்தின் ஜவுளித் துறையின் மு க் கியத்துவத்தையும், ஜவுளித் துறையின் செயல்பாட்டை பாதி க் கும் பருத்தி மற்றும் நூல் விலை முன்பு எப்போதும் இல்லாத வ கையில் உயர்த்தப்பட்டிருப்பதையும் சுட்டி க் காட்டி, கடந்த நவம்பர் மாதம் தான் எழுதியிருந்த கடிதத்தை மேற் கோள் காட்டியுள்ளார்.  

நூல் விலை ஏற்ற இற க் கம் மற்றும் ஆடை களின் விலையில் அதன் பாத கமான தா க் கம் ஆ கியவற்றின் கடுமையான நிலைமையை தமிழ்நாடு ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர் கள் தெரிவித்து வருவதா க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தனது முந்தைய கடிதத்தில், பருத்தி மற்றும் நூலின் விலை உயர்வை க் கட்டுப்படுத்த பின்வரும் நடவடி க் கை களை எடு க் க வேண்டும் என்று தான் ஏற் கெனவே கோரியிருந்ததா கச் சுட்டி க் காட்டியுள்ளார்.

2020 டிசம்பர் மாதம் முதல், 2021 டிசம்பர் வரை நூல் விலை உயர்வில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்தினையும், உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவிடும் விலையினையும் சுட்டி க் காட்டியுள்ள முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், இந்த நிலைமை கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஏராளமான விசைத்தறி கள், ஆடை மற்றும் வீட்டு உபயோ க ஜவுளி உற்பத்தித் தொழில கங் கள் இயங் குவது விரைவில் சாத்தியமற்றதா கிவிடும் என்றும், இதன் விளைவா க மாநிலத்தில் பெரிய அளவிலான வேலையின்மை மற்றும் தொழில் துறை அமைதியின்மை ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆபத்தான நிலைமையை சீரமைத்திட இவ்விவ காரத்தில், மத்திய அரசு உடனடியா கத் தலையிட்டு உரிய நடவடி க் கை மேற் கொள்ள கேட்டு க் கொள்ள வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.