மாணவர்களின் நலன் கருதி +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் இந்தாண்டு ஆண்டு 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாணவர்களின் நலன் கருதி +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளி கல்வித்துறை பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் இன்று  சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் இது தொடர்பாக மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடைபெற்றது.

இவர்கள் அனைவரிடமும் பெறப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் அறிக்கையாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார். இந்நிலையில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதிப்பெண் வழங்கும் முறையை வகுக்கும் குழுவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்பர். மதிப்பெண் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com