நீட் தேர்வின் வரலாறு தெரியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.. ஓ.பி.எஸ் சாடல்

நீட் தேர்வின் வரலாறு தெரியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், திமுகவை சேர்ந்த காந்திசெல்வன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சராக இருந்த போது கடந்த 2010ஆம் ஆண்டு மருத்துவம் பயிலுவதற்கு நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதாக சுட்டி காட்டியுள்ளார்.

எனவே, நீட் தேர்வு வந்ததன் வரலாற்றை அறிந்து கொள்ளாமல் மனம் போன போக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச வேண்டாமென்று கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.