அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை சீரழிப்பதற்காக, சிலர் விஷம பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்: முதலமைச்சர் குற்றச்சாட்டு

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை சீரழிப்பதற்காக, சிலர் விஷம பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை சீரழிப்பதற்காக, சிலர் விஷம பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்: முதலமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்திட வேண்டும் என்ற நோக்கத்திலேயே, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்ததாகக் கூறிய முதலமைச்சர், அப்போது அதனை நடைமுறையில் கொண்டுவர முடியவில்லை என்றும், அதனை தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.  

எனினும், அதனை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை சீரழிப்பதற்காக, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாகவும், சமூக நீதியை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருசிலர் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், யாரையும் பணியிலிருந்து நீக்கி, புதிய பணி நியமனங்கள் வழங்கப்பட வில்லை எனக் கூறிய முதலமைச்சர், அவ்வாறு பாதிக்கப்பட்டதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.