துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மீனவர்...குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்!

கர்நாடக வனத்துறையினாின் துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தொிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளாா்.
தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியில் செல்லும் பாலாற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவா் ராஜா என்பவரும், அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கர்நாடக வனத்துறையினர் மான் வேட்டைக்கு வந்ததாக கருதி அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் மாயமாகிய ராஜாவை போலீசார் தேடி வந்தநிலையில் அவா் சடலமாக மீட்கப்பட்டாா். பின்னர் அவா் துப்பாக்கிச்சூட்டில் உயிாிழந்தது தொியவந்தது.
இதையும் படிக்க : மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மக்களுக்கு 28 லட்சம் கோடி பரிமாறப்பட்டுள்ளது - பிரதமர் பேச்சு!
இதுகுறித்து போலீசாா் விசாரணை செய்து வரும் நிலையில், அவரது உடல் குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, உயிரிழந்த மீனவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இருமாநில எல்லையில் பதற்றம் நிலவியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய கா்நாடக வனத்துறையினருக்கு கடும் கண்டனம் தொிவித்துள்ளார். தொடர்ந்து, உயிரிழந்த மீனவாின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா்.