21 அடிக்கு 3000 பொம்மைகள்! சிதம்பரத்தில் பிரம்மாண்ட கொலு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3 ஆயிரம் பொம்மைகளைக் கொண்டு 21 அடி உயரத்தில் வைக்கப்பட்ட பிரம்மாண்ட கொலுவை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர்,

21 அடிக்கு 3000 பொம்மைகள்! சிதம்பரத்தில் பிரம்மாண்ட கொலு!

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். இந்தாண்டும் கோயிலின் உள்ளே உள்ள கொலு மண்டபத்தில் கொலு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள ஜீவ ராசிகளை வணங்கி வழிபடுவதை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இந்த கொலு அமைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் 21 அடி உயரத்தில் 21 அடி அகலத்தில் கொலு வைக்கப்பட்டுள்ளதுஇதில் 21 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க | சரித்திரத்தில் முதன் முறையாக குடியரசு தலைவரால் துவக்கி வைக்கப்பட்ட 413வது ‘தசரா’ திருவிழா!

பல்வேறு வடிவிலான சுமார் 3 ஆயிரம் பொம்மைகளைக் கொண்டு வைக்கப்பட்டுள்ள இந்த நடராஜர் கோயில் கொலுவுக்கு தினமும் தீட்சிதர்கள் பூஜை செய்து வருகின்றனர். கோயிஸ் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட கொலுவை பக்தர்கள் பார்வையிட்டு தரிசனம் செய்தனர்.