தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும்!! அதிரடியாக உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு

தமிழகத்தில்  உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும்  மூட வேண்டும்!! அதிரடியாக உத்தரவிட்ட  சென்னை ஐகோர்ட்டு

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த அனைத்து பார்களையும் 6 மாதங்களில் மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்து  டாஸ்மாக் நிர்வாகத்தின் உரிமையாளர்  மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி சரவணன், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொதுவாக பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளதாகவும், மாறாக டாஸ்மாக் நிர்வாகம் நேரடியகவோ,மறைமுகமாகவோ பார்களை நடத்த அனுமதியில்லை எனவும் ஐகோர்ட்டு நீதிபதி சரவணன் கூறியுள்ளார்.  

தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளுக்கு அருகேயுள்ள இடங்களை மேம்படுத்தி பார் அமைக்கும் முறையை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்து போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பார் உரிமையாளர்கள் அனைவரும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.