10 நிமிடத்தில் உணவு டெலிவரி எப்படி சாத்தியம்? சொமேட்டோவிடம் கேள்வி எழுப்பிய சென்னை போக்குவரத்து போலீஸ்!!

10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படுவது குறித்து சொமேட்டோ நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து போலீஸார் விளக்கம் கேட்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 நிமிடத்தில் உணவு டெலிவரி எப்படி சாத்தியம்? சொமேட்டோவிடம் கேள்வி எழுப்பிய சென்னை போக்குவரத்து போலீஸ்!!

வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உணவு பொருட்களை குறிபிட்ட நேரத்தில் கொண்டுவந்து வழங்கும் பிரபல உணவுப்பொருள் விநியோக நிறுவனமான சொமேட்டோ, தற்போது வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்த 10 நிமிடங்களில், வீட்டில் டெலிவரி செய்யப்படும் புதிய வசதியை கொண்டு வந்துள்ளதாக அறிவித்திருந்தது.

ஆனால், இந்த புதிய வசதியால் டெலிவரி செய்யும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். அதுமட்டுமில்லாமல், அவசர அவசரமாக டெலிவரி செய்ய வேண்டும் என்று பணியாளர்கள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி செல்லும்போது, இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில் இந்த திட்டத்தின் பின்விளைவுகளை சற்றும் யோசிக்காமல் அதனை செயல்படுத்துவது குறித்து அந்த நிறுவன அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.