அரசு விதிகளுக்கு எதிராக செயல்பட்ட வக்பு போர்டு வாரிய தலைவர் மேல் வழக்கு!

அரசு விதிகளுக்கு எதிராக காரில் தேசிய கொடி, அரசு லோகோ, சுழல் விளக்குடன் வலம் வந்த வக்பு போர்டு வாரிய தலைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அரசு விதிகளுக்கு எதிராக செயல்பட்ட வக்பு போர்டு வாரிய தலைவர் மேல் வழக்கு!

தமிழ்நாட்டின் வக்பு போர்டு வாரிய தலைவராக அப்துல் ரகுமான், கடந்த 2021 ஆண்டு முதல் 5 ஆண்டு கால பதவி வகித்து வருகிறார்.  கடந்தாண்டு ஜூலை மாதம் பதவியேற்ற பின், இவர் தனது வாகனத்தில் தேசிய கொடி மற்றும் அரசு இலச்சினை, சுழல் விளக்கு வைத்து வலம் வருகிறார்.

இந்திய குடியரசு தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், கேபினட் அமைச்சர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட சிலரே சுழல் விளக்கை பயன்படுத்த வேண்டும் என்பது விதியாகும்.

மேலும் படிக்க | ஞானவாபி வழக்கு 2021 முதல் இன்று வரை!!!

ஆனால், அதற்கு எதிராக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் விதிகளை மீறி, தேசிய கொடியுடனும், அரசு இலச்சினை, சுழல் விளக்குடன் காரில் பயணித்தாகவும், இதற்கு எதிராக தமிழ்நாடு வக்பு பாதுகாப்பு குழு அறக்கட்டளை தலைவர் எம். அஜ்மல் கான் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க கால தாமதம் செய்ததால், அஜ்மல் கான் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் காவல் துறையினரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது.

மேலும் படிக்க | நீங்க நடையா நடங்க! நாங்க பைக்-ல சுத்தறோம்!!!- காங்கிரசுக்கு போட்டியாக பாஜக!!!

நீதிமன்ற உத்தரவின் பேரில், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார், வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது தேசிய கொடி அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்துல் ரகுமான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணைத் தலைவராகவும், திமுகவுடன் கூட்டணியில், கடந்த 2009 ஆம் ஆண்டு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்