நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் இருக்கும் பட்டியலில் சென்னை உயர்நீதிமன்றம் முதலிடம்!

நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் இருக்கும் பட்டியலில் சென்னை உயர்நீதிமன்றம் முதலிடம் பிடித்துள்ளது. 

நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் இருக்கும் பட்டியலில் சென்னை உயர்நீதிமன்றம் முதலிடம்!

நீதித்துறை நியமனங்களுக்கான கொலீஜித்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல்களில் பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் குறித்தான பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி 13 பெண் நீதிபதிகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் முதலிடத்திலும் 12 பெண் நீதிபதிகளுடன் டெல்லி உயர்நீதிமன்றம் 2ம் இடத்திலும் 10 பேருடன் தெலங்கானா உயர்நீதிமன்றம் 3ம் இடத்திலும் உள்ளது தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள 713 பேரில் 94 பெண் நீதிபதிகள் 13 புள்ளி 18 என்ற சதவீதத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், பாட்னா, மேகாலயா, திரிபுரா, மணிப்பூர் ஆகிய உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லாதது குறிப்பிடத்தக்கது.