வாய்தா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் :  உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !!

வாய்தா திரைப்படத்தை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வாய்தா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் :  உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !!

இன்று வெளியாகியுள்ள வாய்தா திரைபடத்தில் நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் விமர்சித்து இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஜானகிராமன், மஹிவர்மா இயக்கத்தில் வெளியான வாய்தா திரைபடத்தில் வழக்கறிஞர்களை மிகவும் தரகுறைவாக சித்தரித்தும், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் ஜாதி அடிப்படையிலேயே தீர்ப்பு வழக்குவதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற ஒரு சார்பிற்கு எதிராக எடுக்கும் படங்களின் காட்சிகளை தணிக்கை குழு நீக்க வேண்டும். ஆனால், அதனை செய்யவில்லை எனவே தமிழக முதல்வர் கவனத்திற்கு சென்று நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கு எதிரான காட்சிகளை நீக்கவும், இது போன்ற படங்களை தடை செய்யவும் கோரிக்கை வைத்தனர்.