3 பேர் மீது மின்சாரம் தாக்கி சிகிச்சை! 4 பேர் மீது வழக்கு பதிவு!

மழைநீர் வடிகால்வாய்க்காக பள்ளம் தோண்டியபோது மின்சாரம் தாக்கி 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மண்டல உதவி பொறியாளர் உட்பட 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

3 பேர் மீது மின்சாரம் தாக்கி சிகிச்சை! 4 பேர் மீது வழக்கு பதிவு!

சென்னை ஐ.சி.எஃப் சிக்னல் அருகே மழைநீர் வடிகால்வாய்க்காக பள்ளம் தோண்டும் பணி நேற்று நடைபெற்றது. மாநகராட்சியின் ஒப்பந்த ஊதிய அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் குமார் (27), கொளத்தூரைச் சேர்ந்த கண்ணன் (50) மற்றும் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (35) ஆகிய மூன்று பேர் இந்த பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் படிக்க | மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழப்பு...!

பணியின்போது எதிர்பாராத விதமாக மூவரையும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் மயக்கமடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க | ’அண்ணா மாடல்’ vs ’மோடி மாடல்’

மருத்துவமனையில் அருண் குமார் 52% பாதிப்புகளுடனும், கண்ணன் 79% பாதிப்புகளுடனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட மற்றொரு நபரான பாலமுருகனும் 23% பாதிப்புகளுடன் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க | உத்திரபிரதேசம்: டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை.. திருட்டு பயத்தால் பேட்டரிகள் பதுக்கல்..!

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஐ.சி.எஃப் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த மண்டல உதவி பொறியாளர் பிரமிளா ராணி (50), ஒப்பந்த உதவி பொறியாளர் நந்தகுமார் (30), ஜே.சி.பி ஓட்டுனர் ஜெயபாலன் (26) மற்றும் ஒப்பந்த கண்காணிப்பாளர் பன்னீர் செல்வம் (50) ஆகிய 4 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க | புதிய மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது..!

இந்நிலையில் தற்போது பொது சொத்தை சேதப்படுத்துதல், கவனக் குறைவாக செயல்பட்டு மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், இயந்திரங்களை கவனக் குறைவாக கையாளுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல மழைநீர் வடிகால்வாய் ஒப்பந்ததாரரான ராமச்சந்திரன் என்பவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | மேலும் உதவிகளை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது-இலங்கை பிரதமர் !