சென்னை தினம்..! நாளை முதல் போக்குவரத்து மாற்றம்..!

சென்னை தினம்..! நாளை முதல் போக்குவரத்து மாற்றம்..!

சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளதை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டின் தலைநகராக சென்னை தோற்றுவிக்கப்பட்ட 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நினைவூட்டும் பொருட்டு 'மெட்ராஸ் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆயிரம் ஆண்டு வரலாறு:

மெட்ராஸ் மாகாணத்திலிருந்து சென்னையாக மாறிய நகரத்திற்கு என ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதாக கூறப்படுகிறது. நாட்டின் முக்கிய நகரமான சென்னை, பொருளாதாரத்திலும் சமூக அளவிலும் மிக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. மற்ற முக்கிய நகரங்களை காட்டிலும் சென்னையின் வளர்ச்சி தனித்துவமானது. ஏனெனில், இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.

சென்னை தினம்:

வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி, சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது. சென்னை தினத்தை முன்னிட்டு 2 நாட்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்தாண்டு சென்னையின் 383-வது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் நாளை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்:

ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி மாலை 6 மணி வரை பெசன்ட் நகரில் 7ஆவது நிழற்சாலையில் இருந்து 6ஆவது நிழற்சாலை வரை, எலியட்ஸ் கடற்கரைக்கு செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


வாகனங்கள் அனைத்தும் 16ஆவது குறுக்குத் தெரு வழியாக 2ஆவது நிழற்சாலை நோக்கி திருப்பி விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3ஆவது மெயின் ரோட்டில் இருந்து 6ஆவது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 3ஆவது மெயின் ரோடு மற்றும் 2ஆவது நிழற்சாலை சந்திப்பில் வாகனங்கள் அனைத்து திருப்பிவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.