கொரோனா பரிசோதனையை மறைக்கிறதா சென்னை மாநகராட்சி..? 3 நாட்களாக வெளிவராத பரிசோதனை கொரோனா அறிவிப்பு...

கொரோனா பாதிப்பு உருவானதில் இருந்தே தினசரி மேற்கொள்ளப்படும் பரிசோதனை எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

கொரோனா பரிசோதனையை மறைக்கிறதா சென்னை மாநகராட்சி..? 3 நாட்களாக வெளிவராத பரிசோதனை கொரோனா அறிவிப்பு...

கடந்த ஒன்றரை வருடங்களாகவே இதை கடைப்பிடிக்கும் சென்னை மாநகராட்சி கடந்த சில தினங்களாக அதற்கான அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது.

சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் தினசரி, கொரோனா பரிசோதனை நிலவரம், பாதிக்கப்பட்டவர்கள் நிலவரம், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, சிகிச்சை இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வ டிவிட்டர் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிடப்படும்.

அதுமட்டுமின்றி, மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கையும் வெளியிடப்படும்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் சூழலில், கடந்த 3 நாட்களாக சென்னை மாநகராட்சி இந்த அறிவிப்பை வெளியிடுவதில் தயக்கம் காட்டி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முறையான  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா? தொற்று குறைந்ததால் பரிசோதனை குறைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து வெளிபப்டைத்தன்மையுடன் மாநகராட்சி அறிவிக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.