சென்னை மாநகராட்சி மேயர் - அமெரிக்க சான் ஆண்டோனியோ மேயர் சந்திப்பு..! என்ன காரணம்...?

சென்னை மாநகராட்சி மேயர் - அமெரிக்க சான் ஆண்டோனியோ மேயர் சந்திப்பு..! என்ன காரணம்...?
Published on
Updated on
1 min read

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உடன் அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான் ஆண்டோனியோ மாநகரத்தின் மேயர் ரான் நிரன்பர்க் தலைமையிலான குழுவினர் சகோதரத்துவ நகரங்களின் இணைப்பு ஒப்பந்தங்கள்படி, சென்னை மற்றும் சான் ஆண்டோனியோ நகரங்கள் இணைந்து செயல்படுவது குறித்து இன்று சந்தித்து உரையாடினர்.

சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான் ஆண்டோனியோ நகரத்தின் மேயர் ரான் நிரன்பர்க் தலைமையிலான குழுவினர் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை சந்தித்து கலந்துரையாடினர். அப்போது சென்னை மாநகராட்சியின் கட்டமைப்பு, திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எடுத்துரைத்தார்.

சென்னை மற்றும் சான் ஆண்டோனியோ நகர மக்களின் ஆக்கபூர்வ உறவுகளை மேம்படுத்துவதுடன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், இரு மாநகர மக்களின் பண்பு, அறிவுத்திறன், பொருளாதாரம் ஆகியவைகளை மேலும் வளப்படுத்தும் வகையிலும் இரு நகர மேயர்களும் ஒத்துழைப்பு நல்கி செயல்படுவோம் என உரையாடினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com