டிக்டாக்-காக மீண்டும் ஆபத்தில் குதிக்கும் இளைஞர்கள்...

செங்கல்பட்டு தசரா இராட்சத இராட்டிணத்தில் தொங்கியபடி டிக்டாக் செய்த இளைஞர்கள் வைரல் வீடியோ...

டிக்டாக்-காக மீண்டும் ஆபத்தில் குதிக்கும் இளைஞர்கள்...

செங்கல்பட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தசராபண்டிகை கடந்த 27ஆம்தேதி துவங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது அதேபோல் எதிர்ப்பார்த்ததை விட அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இராட்சத இராட்டிணத்தில் சுற்றுவதில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிகநேரம் கால்கடுக்க  காத்திருந்து இராட்டிணத்தில் சுற்றிவருகின்றனர்.

மேலும் படிக்க | மனைவி ஒப்புதலுடன் காதலியை திருமணம் செய்த கணவர் தலைமறைவு!

இந்நிலையில் இளைஞர்கள் சிலர் அந்த அபாயகரமான இராட்டிணத்தில் வடிவேலுவின் சினிமா பட காமெடி வசத்தை வைத்து அந்தரத்தில் தொங்கியபடி டிக்டாக் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். தகவலறிந்து நேரில் வந்த செங்கல்பட்டு நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து எச்சிரித்து  இராடாடிணத்தை இயக்கக்கூடாது என தடைவிதித்தும் தொடர்ந்து இராட்டிணம் இயக்கப்படுகிறது.

மிகவும் ஆபத்தான இந்த டிக்டாக் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாக பரவிவருவதால் இராட்சத இராட்டிணத்தில் சுற்றுவதற்கு இளைஞர்கள் மத்தியில் அச்சம் ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிக்டாக் சம்பவத்தால்  இளம்பெண்கள் அச்சத்தின் காரணமாக இராட்டிணத்தில் சுற்றுவதை குறைத்து கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் படிக்க | TTF ஓட பவர் தெரியாம..! நியூஸ் சேனல்களை மிரட்டும் தொனியில் பேசிய TTF வாசன்..!