கோவில் உண்டியல் கணக்கெடுப்பு! வந்தவை அனைத்தும் வங்கியில் சேமிப்பு!

திருப்போரூர் முருகன் கோவிலின் உண்டியலில் 53,17371 ரூபாய் பணமாகவும் 422 கிராம் தங்கம், 5970 கிராம் வெள்ளி யாகவும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர்.

கோவில் உண்டியல் கணக்கெடுப்பு! வந்தவை அனைத்தும் வங்கியில் சேமிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. வாரத்தில் செவ்வாய், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணமாக உள்ளது. 

மேலும் படிக்க | என்னை வம்பிழுக்க வேண்டாம்!- நிருபர்களைத் தவிர்த்த ஆதீனம்!

அதே போன்று விசேஷ நாட்களான கிருத்திகை சுப முகூர்த்த நாள் போன்ற தினங்களிலும் கடந்த மாதம் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், நகை, வெள்ளிப்பொருட்களை காணிக்கையாக செலுத்தும் 12 உண்டியல்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் கனரா வங்கி ஊழியர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள், மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட 300 க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணினர்.

மேலும் படிக்க | கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை...! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...!

அதில் 53,17371 ரூபாய் பணமாகவும் 422 கிராம் தங்கம், 5970 கிராம் வெள்ளி யாகவும் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். காணிக்கை பொருட்கள் அனைத்தும் கனரா வங்கியில் கோயில் கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும் உண்டியல் எண்ணும் இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அனைத்தும் கண்காணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.