தங்க செயினுக்கு பதில் கவரிங் நகையை மாற்றி திருட்டு :  நகைக்கடையில் மர்ம பெண்கள் கைவரிசை !!

நகை வாங்குவது போல் நடித்து, தங்க செயினை திருடிவிட்டு, கவரிங் செயினை மாற்றி வைத்துவிட்டு தப்பிய பெண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தங்க செயினுக்கு பதில் கவரிங் நகையை மாற்றி திருட்டு :  நகைக்கடையில் மர்ம பெண்கள் கைவரிசை !!

தஞ்சாவூர் தென்கீழ் அலங்கத்தில் உள்ள நகை கடையில் நேற்று மதியம் பர்தா அணிவந்த இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் ஊழியர்களிடம் பேசியுள்ளனர். அப்போது செயின் வேண்டும் என அப்பெண்கள் கூற,  கடை ஊழியர் ஐந்து செயின்களை காட்டியுள்ளார்.

அப்போது கடை ஊழியரை திசை திருப்பிய மர்ம பெண்கள் ஒரு தங்க செயினை திருடிவிட்டு, அதற்கு பதிலாக கவரிங் செயினை மாற்றி வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். கடை ஊழியரும் எண்ணிக்கையில் செயின் சரியாக இருந்ததால் கவனிக்கவில்லை, 

இந்நிலையில் மீண்டும் செயினை சரிபார்க்கும் போது கவரிங் செயினை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைத்து வெளியே தேடிய போது மர்ம பெண்கள் தப்பியோடியுள்ளனர். இது குறித்து கடை உரிமையாளர் தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.