வார்த்தை மாற்றத்தால் அதிகாரத்தை மாற்ற முடியாது.! ஒன்றிய அரசு குறித்த கேள்விக்கு ஜி.கே .வாசன் பதில்.! 

வார்த்தை மாற்றத்தால் அதிகாரத்தை மாற்ற முடியாது.! ஒன்றிய அரசு குறித்த கேள்விக்கு ஜி.கே .வாசன் பதில்.! 

வார்த்தை மாற்றங்களால் அவரவர் அதிகாரங்களை கூட்டவோ, குறைக்கவோ முடியாது என ஒன்றிய அரசு குறித்து ஜி.கே .வாசன் தெரிவித்துள்ளார்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்  த.மா.க தலைமை கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தடுப்பூசி 100% அவசியம் என்பதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம் என்றும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்  மக்களிடம்  தனித்தனியே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாகவும் கூறினார்.

மேலும், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,  பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மாணவர்களை குழப்ப வேண்டாம் என்றும், மாணவர்களை நீட் தேர்விற்கு தற்போது தயார் படுத்துவதே அரசின் கடமை என்றும் குறிப்பிட்ட அவர்.ஒன்றிய அரசு குறித்த சொல் அவர் எதுவானாலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் அதிகாரங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தில் இருக்கிறது. வார்த்தை மாற்றங்களால் அவரவர் மரியாதையை கூட்டவோ குறைக்கவோ முடியாது எனவும் தெரிவித்தார்.

அதோடு சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகள் கொடுக்கப்பட்டதாகவும் மேலும்  கொடுக்கப்பட்ட தொகுதிகளில்  எங்களால் முடிந்தவரை வெற்றிப்பெற முயற்சிகள் செய்தோம் என்றும், அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.