நீட் தேர்வு வினாத்தாளில் மாற்றம்... விருப்பத்தேர்வு முறை அறிமுகம்...

நீட் தேர்வு வினாத்தாளில் மாற்றம் செய்து, விருப்பத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாளில் மாற்றம்... விருப்பத்தேர்வு முறை அறிமுகம்...

நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12-ல் நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வரும் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கான வினாத்தாளில் இந்த ஆண்டு விருப்பத் தேர்வுகள் ( Choice) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என்று 4 பாடங்களும் Section-A, Section-B என்று பிரிக்கப்பட்டுள்ளது.

Section A-ல் 35 கேள்விகளும், Section B-ல் 15 கேள்விகளும் இடம்பெறும் என்றும், மாணவர்கள் Section  A-ல் உள்ள 35 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும் என்றும், Section B-ல் உள்ள 15 கேள்விகளில் 10 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

அதாவது 200 கேள்விகள் கேட்கப்படும் என்றும், அதில் 180 கேள்விகளுக்கு 720 மதிப்பெண்களுக்கு விடையளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாலும், விருப்பத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.