12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கும் முறையில் புதிய நடைமுறை அறிமுகம்...

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கும் முறையில், புதிய நடைமுறையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கும் முறையில் புதிய நடைமுறை அறிமுகம்...

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு முந்தைய வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் உயர்கல்வியில் எளிய முறையில் சேர மதிப்பெண் கணக்கீட்டில் புதிய நடைமுறையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.

மேலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண் விவரங்கள் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், தசம அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாக தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

உதரணமாக  12-ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தில் ஒரு மாணவரின் முந்தைய மதிப்பெண்களின் சராசரி 97 புள்ளி 67 என்று இருந்தால்,  அந்த மாணவருக்கு 98 என்று வழங்காமல், 97 புள்ளி 67 என்று தசம அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் கட் - ஆப் கணக்கீட்டின் போது மாணவர்கள் பாதிப்படைவதை தவிர்க்க இந்த புதிய நடைமுறை அமல்படுத்த உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.