சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் மாற்றம்... பல ஆணையர்கள் அதிரடி மாற்றம் செய்தது ஒன்றிய அரசு...

சென்னை விமானநிலையம்,துறைமுகம் ஆகியவற்றில் சுங்கத்துறை ஆணையா்கள் ஒட்டுமொத்தமாக  இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் மாற்றம்... பல ஆணையர்கள் அதிரடி மாற்றம் செய்தது ஒன்றிய அரசு...
சென்னை விமானநிலைய சுங்கத்துறை ஆணையராக ராஜன் சவுத்திரி இருக்கிறாா்.இவா் கடந்த 2017 ஜுலை 10 ஆம் தேதி சென்னை விமானநிலைய சுங்கத்துறை ஆணையராக பொறுப்பேற்றாா். இவா் தொடா்ந்து 4 ஆண்டுகளாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை ஆணையராக இருந்தாா்.
 
தற்போது ராஜன் சவுத்திரி மகராஷ்டிரா மாநிலம் தாணே நகருக்கு GST ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக சென்னை விமானநிலைய சுங்கத்துறைக்கு புதிய ஆணையா் இதுவரை நியமிக்கப்படவில்லை.
 
அதைப்போல் சென்னை விமானநிலைய சுங்கத்துறை அப்பீல் ஆணையராக இருந்த ரவிசெல்வன்,சென்னை புறநகா் GST ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
 
சென்னை விமானநிலைய காா்கோ பிரிவு சுங்கத்துறைக்கு புதிய ஆணையராக,கேரளா மாநிலம் கொச்சி நகரில் GST ஆணையராக இருக்கும் உதய்பாஸ்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
 
அதைப்போல் சென்னை துறைமுகத்தில் சுங்கத்துறை ஆணையா்களாக இருக்கும் பாா்த்தீபன்,சுதா கோகா, பத்மஶ்ரீ, சீனிவாசநாயக் ஆகிய 4 பேரும்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
 
டில்லியில் உள்ள ஒன்றிய நிதி அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 108 சுங்கத்துறை மற்றும் GST ஆணையா்களை அதிரடியாக இடம் மாற்றங்கள் செய்துள்ளது. அதில் சென்னை விமானநிலையம் மற்றும் துறைமுகத்தில் பணியிலிருந்த சுங்கத்துறை ஆணையா்களும் ஒட்டு மொத்தமாக  மாற்றப்பட்டுள்ளனா்.