31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. புதுச்சேரி, காரைக்காலுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

சென்னையில் இரவு முதல் காலை வரை வெளுத்து வாங்கிய மழை..!

31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. புதுச்சேரி, காரைக்காலுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

24-ம் தேதி புயல்:

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வரும் 24ஆம் தேதி புயலாக வலுப்பெற்று மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரவித்திருந்தது. 

சென்னையில் மழை:

இந்நிலையில் சென்னையில் இரவுமுதல் விடியற்காலை வரை பல்வேறு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:

புயல் காரணமாக இன்றும் நாளையும் நீலகிரி ,கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 31 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புதுச்சேரிக்கு எச்சரிக்கை:

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கன மழை பெய்யும் இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என தெரிவித்துள்ளது