அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்!

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும், ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை, அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com