4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் எச்சரிக்கை...

வேலூர் திருவள்ளூர் ராணிப்பேட்டை சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.

4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் எச்சரிக்கை...

சென்னை வானிலை மையம் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது :

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக வேலூர் திருவள்ளூர் ராணிப்பேட்டை சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

21.09.2021 அன்று வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்களை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
 
22.09.2021 அன்று திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

23.09.2021 அன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் , கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

24.09.2021 அன்று கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய   மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

25.09.2021 அன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்களை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பகலில் தெளிவாக காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

மணம்பூண்டி  (விழுப்புரம்), கலசப்பாக்கம்  (திருவண்ணாமலை) தலா  16  திருக்கோயிலூர், (கள்ளக்குறிச்சி) 11, கீழ்பென்னாத்தூர்  (திருவண்ணாமலை) 10, மயிலாடுதுறை, குறிஞ்சிப்பாடி  (கடலூர்), ஆலங்காயம்  (திருப்பத்தூர்) தலா 9, போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி),  சூரபட்டு  (விழுப்புரம்) தலா 7,  சாத்தூர்  (விருதுநகர்), புவனகிரி  (கடலூர்) தலா 6, ராதாபுரம்  (திருநெல்வேலி), காஞ்சிபுரம், மேலாளத்தூர் (வேலூர்) தலா 5, மேட்டுப்பாளையம் (கோவை), காவேரிப்பாக்கம்  (ராணிப்பேட்டை), முகையூர் (விழுப்புரம்) தலா 4,  திருத்துறைப்பூண்டி  (திருவாரூர்),   சீர்காழி (மயிலாடுதுறை) தலா 3, நாகப்பட்டினம் ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), புதுச்சத்திரம் (நாமக்கல்), குன்னூர் (நீலகிரி), சிவகங்கை  தலா  2, காரைக்கால், ஒகேனக்கல் (தர்மபுரி) தலா   1.