டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் எச்சரிக்கை...

புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் எச்சரிக்கை...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர் உள்பட 8 மாவட்டங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இதேபோல், நாளையும், இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.  

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இன்று இரவு வடகிழக்கு பருவமழை  தொடங்க சாதகமான சூழல் உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.