சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்க வாய்ப்பு....வானிலை ஆய்வு மையம்...!

அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை சென்னையில் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்க வாய்ப்பு....வானிலை ஆய்வு மையம்...!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காலை முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் திடீரென மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை சென்னையில் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,  சிவகங்கை,  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், தியாகராயநகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு, புதுப்பேட்டை, தேனாம்பேட்டை, மௌண்ட் ரோடு, அண்ணா சாலை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது....

சென்னையில் காலை முதல் பெய்த மழையின் காரண்மாக நகரின் தாழ்வான பகுதிகளில் மீண்டும் சில நாட்களுக்கு பிறகு முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி  இருக்கிறது..

குறிப்பாக வடகிழக்கு பருவமழையால் சென்னை முழுவதும் உள்ள சாலைகள் குண்டு குழியுமாக இருந்த சூழ்நிலையில் மீண்டும் இன்று பெய்த மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்து உள்ளாகி இருக்கிறார்கள்..