தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வருகிற 23 மற்றும் 24 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 22ஆம் தேதி வரை மிதமான மழையே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் வருகிற ஆகஸ்ட் 23 மற்றும் 24 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மழை நிலவரம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

மேலும், இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வட ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.