தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதனிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்கள் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.