4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்றும், நளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் 16 செ. மீ., மழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.