7 -ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி...15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!

7 -ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி...15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!

தமிழ்நாடு, புதுச்சேரியின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆறாம் தேதி ஒரு வளிமண்டல சுழற்சி நிலவக் கூடும் என்றும், இது ஏழாம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என்றும், எட்டாம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்  கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும்m  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க : சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ”ரோல் மாடல்” உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் சி.வி. கணேசன்!

இதனிடையே, தமிழ்நாடு கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மே ஐந்தாம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல்,  கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

இதனைத் தொடர்ந்து, 8 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.