தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை  பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

25ஆம் தேதி அன்று, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.