குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர் உட்பட பத்து மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளை தெற்கு ஆந்திரா -  வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என அறிவித்துள்ளது.

இதன் காரணமாக  சென்னை, திருவள்ளூர் உட்பட பத்து மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை மிக கன மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.

மேலும் அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அளவு மாறாமல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளை நாளை நெருங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.