"எதிரிக்கட்சித் தலைவராக செயல்பட வேண்டாம்" - இபிஎஸ்-ஐ சாடிய சக்கரபாணி!

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை எதிரிக்கட்சித் தலைவர் என சாடிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

"எதிரிக்கட்சித் தலைவராக செயல்பட வேண்டாம்" - இபிஎஸ்-ஐ சாடிய சக்கரபாணி!

தமிழகத்தில் இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்காமல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் பிடிபட்ட கடத்தல் ரேசன் அரிசி குறித்து மட்டுமே சக்கரபாணி பேசி வருவதாக ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருந்தார்.

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்துக்கு பதிலளித்த சக்கரபாணி, எதிரிக்கட்சி தலைவராக செயல்பட வேண்டாம் எனக்கூறியதாக ஜெயக்குமார் சுட்டிக்காட்டினார்.

அரசியல் நாகரீகம் குறித்து பாடமெடுக்கும் அமைச்சர் சக்கரபாணி, ஆரோக்கியமான கண்ணியமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.