மத்திய அரசு ஒரு மொழியை மட்டும் திணிக்க முயற்சிக்கிறது.. ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!

22-வது நாள் பயணத்தை நீலகிரியில் தொடங்கியுள்ள ராகுல்காந்தி..!

மத்திய அரசு ஒரு மொழியை மட்டும் திணிக்க முயற்சிக்கிறது.. ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!

22-வது நாளாக தொடரும் பயணம்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது ஒற்றுமைப் பயணத்தின் 22வது நாளான நேற்று நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபயணம் மேற்கொண்ட அவர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். 

பிரிவினைவாதம் அமைதியை சீர்குலைக்கும்:

அப்போது பேசிய ராகுல்காந்தி, பிரிவினைவாதம் மூலம் அமைதியை சீர்குலைக்கும் பாஜக அரசின் முயற்சியை தடுக்கவே தாம் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். 

ஜிஎஸ்டி நாட்டு மக்களுக்கு எதிரானது:

மத்தியில் ஆட்சி செய்யும் அரசு, மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறிய அவர், சரக்கு மற்றும் சேவை வரி நாட்டு மக்களுக்கு எதிரானது என்றும், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் இதனால் நலிவடைந்து வருவதாகவும் சாடினார். 

ஒரு மொழியை திணிக்க முயற்சிக்கிறது:

பல்வேறு மொழி பேசும் இந்தியாவில் மத்திய அரசு அனைத்து மாநில மொழிகளையும் ஊக்குவிக்காமல் ஒரு மொழியை திணிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

ஆளுநர்கள் மாநில அரசை மதிக்க வேண்டும்:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர்கள் மதித்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய ராகுல் காந்தி, தற்போதைய பாஜக ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருவதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பாமர மக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.