அண்ணாநகர் மருந்துகள் பண்டக சாலையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் ஆய்வு!!

சென்னை அண்ணா நகர் மாவட்ட மருந்துகள் பண்டகசாலையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் ஆய்வு செய்தார்.

அண்ணாநகர் மருந்துகள் பண்டக சாலையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் ஆய்வு!!

இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி மற்றும் தமிழகம் வந்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா இன்று காலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் இருந்து மெரினா கடற்கரை வரை உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தை ஆய்வு மேற்கொண்டு, அங்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், தேசிய நலவாழ்வு குழுமம் உட்பட தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படக் கூடிய பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தகவலை கேட்டறிந்தார்.

இதையடுத்து சென்னை ஆவடியில் கட்டப்பட உள்ள மத்திய சுகாதார மையத்தின் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள  மாவட்ட மருந்துகள் பண்டகசாலையில்  மன்சுக் மாண்டவியா நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதார துறை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.