தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருவதற்கு இதுவே சாட்சி - அண்ணாமலை!

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருவதற்கு, ராஜ்நாத் சிங்கின் ஆய்வே சாட்சி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருவதற்கு, ராஜ்நாத் சிங்கின் ஆய்வே சாட்சி என்று கூறினார்.

இதையும் படிக்க : இடைக்கால நிவாரணமாக ரூ. 2,000 கோடி வழங்க வேண்டும் - முதலமைச்சர் கோரிக்கை!

24 மணி நேரத்திற்குள் 450 கோடி ரூபாய் நிவாரணத்தை விடுவித்துள்ளதாகவும் , இதேபோல் 7 ஆண்டுகளில் பல்வேறு பணிகளுக்காக 4 ஆயிரத்து 397 கோடி ரூபாய் அளித்துள்ளதாகவும், மத்திய அரசு வழங்கும் நிதிகளை திமுக அரசு முறையாக செயல்படுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

முன்னதாக, மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பார்வையிட்டு சேதங்களை ஆய்வு செய்தார்.