மத்திய அரசின் அம்ரித் மஹோத்ஸவ் திட்டம் - தமிழகத்தில் முதல் முறையாக இன்று தொடக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அம்ரித் மஹோத்ஸவ் திட்டம் படிப்படியாக மாநிலத்தின்  4448 கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அம்ரித் மஹோத்ஸவ் திட்டம்  - தமிழகத்தில் முதல் முறையாக இன்று தொடக்கம்

கிராமப்புற கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி மூலம்  சுகப்பிரசவத்தை  உறுதிபடுத்தும் வகையில்   அம்ரித் மஹோத்ஸவ் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழகத்தில் முதல் முறையாக  உதகை அருகேயுள்ள முத்தநாடுமந்து  கிராமத்தில்  இந்த திட்டத்தை அமைச்சர்  ம சுப்ரமணியம் இன்று  தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன்,மக்களை  தேடி மருத்துவ திட்டம் என்ற நடமாடும் மருத்துவ  சேவை மாநிலத்தின் 389 வட்டாரங்களுக்கு விரிவு படுத்தப்படும் என்றார்.  கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதில் தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டம் முதலிடம் வகிப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக முத்த நாடு தோடர் பழங்குடியின கிராமத்தில்  மக்களை தேடி மருத்துவம் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனத்தை  அமைச்சர் தொடங்கி  வைத்தார். கர்ப்பிணி பெண்களுக்கான யோகா பயிற்சியை பார்வையிட்டு அவர்களுடன் யோகா பயிற்சியை  அமைச்சர் செய்தார். இதில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சி தலைவர் திரு S.P. அம்ரித், உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.