செல்போன் கோபுரத்தை - அகற்றக்கோரி பொதுமக்கள் மனு!!

செல்போன் கோபுரத்தை - அகற்றக்கோரி பொதுமக்கள் மனு!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே, குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரத்தை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடுவகரை ஊராட்சி கருமாரபாக்கம் பகுதியில் கடும் எதிர்ப்பையும் மீறி, தனியார் நிறுவனம் அமைத்துள்ள செல்போன் டவரை அகற்றக்கோரி, கருமாரபாக்கம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

ஏற்கனவே, மக்களின் போராட்டத்தால் கைவிடப்பட்ட செல்போன் கோபுரம் அமைக்கும் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.