நடந்து செல்வோரை குறி வைத்து செல்போன் பறிப்பு...இரண்டு பேரை கைது செய்த போலீஸ்...!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்து செல்வோரை குறி வைத்து செல்போன் பறிப்ப்பில் ஈடுபட்டு வந்த இரு குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நடந்து செல்வோரை குறி வைத்து செல்போன் பறிப்பு...இரண்டு பேரை கைது செய்த போலீஸ்...!

சென்னை சோழிங்கநல்லூர் குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் கடந்த 23- ஆம் தேதி சோழிங்கநல்லூர் ஓ. எம்.ஆர் சாலையில் உள்ள எச்.பி பெட்ரோல் பங்க் வழியாக செல்போன் பேசியபடி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இளம் பெண் பவித்ராவின் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பவித்ரா கடந்த 24-ஆம் தேதி செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை ஓ. எம்.ஆர் சாலை, குமரன் நகர் சந்திப்பு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவ்விருவரும் சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் குமார்  மற்றும் அஜித் குமார் என்பது தெரியவந்தது. மேலும், அவ்விருவரும் செம்மஞ்சேரி மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள வேளச்சேரி, துரைப்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளிலும் நடந்து செல்வோரைக் குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

பின்னர் அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார்,  அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.