தமிழகத்திற்கு 33.19 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு...

தமிழ்நாட்டுக்கு ஜூன், ஜூலை மாதம் வழங்க வேண்டிய, 33.19 டி.எம்.சி தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகா அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திற்கு 33.19 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு...

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் டெல்லியில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் கர்நாடகா, கேரளா, புதுவை மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ஆணையத்தின் நிர்வாகப் பணியாளர்கள் தேர்வு மற்றும் காவிரி நீர் தொடர்பாக மதுரை, பெங்களூரு உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது கர்நாடகா உரிய நீரை வழங்கவில்லை என்று காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இதை அடுத்து தமிழ்நாட்டுக்கு ஜூன் மாத்ததுக்கான 9.19 டி.எம். சி மற்றும் ஜூலை மாததிற்கான 24 டி.எம்.சி தண்ணீரை தர வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில் பேசிய கர்நாடகா அதிகாரிகள் மேகதாது அணை தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அதிகாரிகள், மேகதாது அணை கட்டுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் கூட்டத்தில் இதுபற்றி பேசக்கூடாது என்று கூறினர்.