பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து: லிஸ்டில் யார் யார் இருக்காங்க!

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் 90 பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், ‘தி இந்து’ நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்கு, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்கு, ‘எக்கனாமிக்ஸ் டைம்ஸ்’  நாளிதழின் ஆசிரியர் மீது 1 வழக்கு, ‘தினமலர்’ நாளிதழின் ஆசிரியர் மீது  12 வழக்கு, ஆனந்த விகடன்’ வார இதழின் ஆசிரியர்  மீது 9 வழக்கு, ‘ஜுனியர் விகடன்’ இதழின் ஆசிரியர் மீது 11 வழக்கு மற்றும்

‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் மீது 23 வழக்கு ‘முரசொலி’ நாளிதழின் ஆசிரியர் மீது 17 வழக்கு, ‘தினகரன்’ நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்கு, புதிய தலைமுறை’ ஆசிரியர் மீது 1 வழக்கு, தொலைக்காட்சி ஆசிரியர் மீது 1 வழக்கு, ‘நியூஸ் 7’ தொலைக்காட்சி ஆசிரியர் மீது 1 வழக்கு, ‘சத்யம்’ தொலைக்காட்சி ஆசிரியர் மீது 1 வழக்கு, ‘கேப்டன்’ தொலைக்காட்சி ஆசிரியர் மீது 1 வழக்கு, ‘என்.டி.டி.வி’ தொலைக்காட்சி ஆசிரியர் மீது 1 வழக்கு, ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி ஆசிரியர் மீது 1 வழக்கு, ‘கலைஞர்’ தொலைக்காட்சி ஆசிரியர் மீது 1 வழக்கு என அனைத்து பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.