"பள்ளி, கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்ற 168 கடைகள் மீது வழக்குப்பதிவு"...!

"பள்ளி, கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்ற 168 கடைகள் மீது வழக்குப்பதிவு"...!

கடந்த ஆண்டை விட இந்தாண்டு 50 சதவீதம் அதிகபடியான போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளை பதிவு செய்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி மெரினா கடற்பரப்பில் கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள போதை விழிப்புணர்வு குறித்த மணற்சிற்பத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார்.

இதனையடுத்து போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து காவல்துறை சார்பில் நடத்திய ஓவிய போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசளித்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே போதை பொருள் விற்பனை செய்ததாக 168 கடைகள் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும், இந்தாண்டு 50 சதவீதம் அதிகபடியான போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளை பதிவு  செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.